பச்சைக் கீரைகள் - அகத்தி, வல்லாரை, வெந்தயம், கொத்துமல்லி, சோம்பு, அரைக்கீரை இவைகள் உத்தமம்.
மணத்தக்காளி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பருப்புக் கீரைகள் தள்ளுபடியல்ல, சாப்பிடலாம்.
பச்சைக் காய்கள் - பாகல், புடல், முத்தின பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ இதமானவை. கிழங்குகள், வெங்காயம், பூண்டு அபத்தியம், தவிர்க்கவும்.
பழங்கள் - மாதுளை நல்லது. நெல்லிக்காய் - பிஞ்சு, முத்தியது, பழுத்தது, உலர்ந்த வத்தல் எல்லா விதத்திலும் மிகவும் நல்லது.
தானியங்கள் - சுமார் ஒரு வருஷம் பழசான நெல்லு புழுங்கிய அரிசி உத்தமம். கோதுமை தள்ளுபடி அல்ல. பாசிப்பருப்பு, மஜூர்டால் நல்லது. கடலை வகைகள், உளுந்து, மொச்சை, பட்டாணி வகைகள் அபத்தியமென்பதால் தவிர்க்கவும். அது போல கேழ்வரகு, கம்பு ,சோளங்கள், முளைக்க வைத்தவை எல்லாம் அபத்தியம்.
ருசி தருபவை - சோம்பு, ஜீரகம்ட, தனியா, மாங்காய், இஞ்சி தாராளமாய்ச் சேர்க்கலாம். இஞ்சிப் பிஞ்சும், மிளகு நெய்யில் வறுத்ததும் மிதமாய்ச் சேர்க்கலாம்.
குடிநீர் - காய்ச்சி ஆறின தண்ணீர், மாமிச உணவுகளை சூப்பாகச் செய்து சாப்பிடவும்.
அபத்தியங்கள் (சேர்க்க கூடாதவை) - புதிய அரிசி, எள்ளு, உளுந்து, மொச்சை, கொள்ளு, தயிர், இட்லி தோசை, வடை. எண்ணெய்ப் பட்ஷணங்கள், பழைய புளி, புளித்த பண்டங்கள், பிரெட், பிஸ்கெட் வகைகள், மதுபானம், கருவாடு, மலமூத்திர வேகங்களை அடக்குதல் முதலியன.
Comments
Post a Comment