Skip to main content

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்.

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். 

உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன். என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: 

மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும்   உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: 

நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்.

3. முருங்கைக்காய்: 

முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்.

4. சர்க்கரை வள்ளி கிழங்கு: 

உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்.

5.மக்கா சோளம்: 

இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: 

தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : 

முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.

8. சின்ன வெங்காயம்: 

பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.

9. குடை மிளகாய் : 

தோல் சுருங்காமல்  fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.

10. காலிபிளவர்

பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்.

11. மாங்காய், தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்.

12. பீர்க்கங்காய்

( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய்): அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது.

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்.

14. புடலங்காய் : 

கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்.

15. உருளை கிழங்கு

முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.

16. கருணை கிழங்கு

முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால்,  உள்புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : 

முளை விட்டது போல் ஒரு முனை நீண்டடு இருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்.

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.

19. இஞ்சி

லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.

20. கத்திரிக்காய்

தோல் மென்மையாக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : 

நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்.

22. பூண்டு

பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ்

பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.

24. அவரை

தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்

பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது.

26. வாழைப்பூ

மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்.

27. மொச்சை : 

கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : 

வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி

லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : 

நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...