Skip to main content

களி மண்ணால் ஆன பிள்ளையாரை வாங்கி வணங்கி கடலில் கரைப்பது ஏன்????

இதோ அதன் விளக்கம்...


கேள்வி :

கணேஷா சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி கொண்டாட படுவதின் உண்மை விளக்கம் என்ன ?

பதில் :
புவி ஈர்ப்பு சக்தி பற்றி நம் அனைவருக்கும் தெரியும், நாம் வசிக்கும் அனைவரது வீட்டிலும்

 *தீய சக்தி அதாவது நெகடிவ் எனர்ஜி* 

இருப்பது இயற்கை, இதற்க்கு நமது வாழ்வியல் முறை காரணம். நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வருடம் ஒருமுறை 

*எனர்ஜி கிளீனிங்* 

என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இந்த முறையை பண்டிகையாக உருவாக்கினார்கள், களிமண் கொண்டு செய்ய படும் விநாயகர் சிலையை வீட்டில் சில தினங்கள் வைத்து அசைவம் சமைக்காமல் இருந்து தினமும் சாம்பிராணி புகை போட்டு 21 நாட்கள் பூஜை செய்வார்கள். அதாவது கலிமண்ணுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டு என்பதால் வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் இந்த சிலையில் இறங்கிவிடும் என்பது தான் உண்மையான நோக்கம்.

21 நாட்களுக்கு பிறகு அந்த விநாயகர் சிலை முழுமையாக தீய சக்தி நிரம்பிய பொருளாக மாறிவிடும். அதனால் தான் சிலையை கடலில் கரைக்க சொன்னார்கள், உப்பிற்கு தீய சக்தியை அழிக்கும் ஆற்றல் உண்டு, அதனால் தான் *திருஷ்டி கழிப்பதற்கு உப்பை பயன்படுத்திநார்கள்* நமது முன்னோர்கள்.   

விநாயகர் வயிற்றில் வைத்த ஒரு ருபாய் நாணயத்தை கொண்டு உப்பை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று கூறியதற்கும் ஓர் காரணம் உண்டு. அதாவது உப்பை தினமும் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் துடைப்பது வழக்கம், உப்பு தண்ணீர் என்பதால் வெண்மையான கறைகள் உண்டாகும், உப்பு தண்ணீரில் துடைத்த பிறகு நல்ல தண்ணீர் கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

இது தான் நமது ஆன்மீக முன்னோர்கள் நமக்கு கூறிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு.


நம் முன்னோர்கள் எதையுமே முக்கியத்துவம் இல்லாமல் செய்யவில்லை....

நம் மூளைக்கு அவர்கள் சொன்னது புரிந்து கொள்ள முடியாததால்....

இன்று நாம் அனைவரும் அவர்கள் சொன்னவற்றை பின்பற்றாமல் மூலையில் தூக்கி எறிந்து விட்டோம்....

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...