Skip to main content

வாயில் கொப்பளங்கள் உண்டாவதன் காரணம் என்ன? இதை நிரந்தரமாகத் தீர்க்க வழி என்ன?

சத்தற்ற உணவு, சாப்பிட்ட பிறகு வாய்சுத்தியில் கவனக்குறைவு, வாயில் தங்கிவிடும் உணவுப் பகுதிகள் புளித்து சுரப்பிகளை புண்ணாக்கி கொப்பளங்கள் ஏற்படுதல், தேவையில்லாமலேயே வீர்யமுள்ள மருந்துகளை அதிகம் சாப்பிடுதல்
தாம்பூலம் போடுபவர்கள் பாக்கும் சுண்ணாம்பும் அதிகமாகச் சேர்ப்பது, பழக்கமில்லாத சுண்ணாம்பை உபயோகிப்பது, காரமுள்ள வெற்றிலை, பச்சைப்பாக்கு முதலிய காரணங்களால் வாய்ப்புண் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன.
கருங்காலிக் கட்டையை வெட்டிப் பெருந்தூளாக இடித்து தண்ணீரில் போட்டு (60 கிராம் கட்டைக்கு 1 லிட்டர் தண்ணீர்  கஷாயமாக்கி (250 ml) கஷாயத்தை வடிகட்டி மறுபடியும் இறுகித் திரளும் வரை காய்ச்சி இறக்கி நிழலில் காய வைத்துக் கொள்ளவும். நல்ல துவர்ப்புச் சுவையுள்ள இது காசுக் கட்டி என்று பெயர். வாய்ப்புண், அஜீர்ணபேதி, மலத்துடன் ரத்தப்போக்கு, ஈறுகரைந்து பல்வேர் தெரிதல், பற்களிலிருந்து ரத்தம் கசிதல், கூச்சம், வாய்க்கொப்பளம் முதலியவைகளில் இதன் தூளை 2-6 டெஸிக்ராம் அளவில் தேனில் குழைத்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து விழுங்க குணம் தெரியும்.
வெளுப்பு கத்தக்காம்பு ஒதலை மரத்தின் இலைகளிலிருந்து எடுக்கப்பெறம் சத்து (white catechu) கசப்பும் துவர்ப்புள்ள இது எகிறுகளில் வீக்கம், பல்வலி, வாய்க்கொப்பளம், எரிச்சல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல் இவைகளில் காசுக்கட்டிக்குக் குறிப்பிட்டது போல சாப்பிட மிகவும் சிறந்தது.
பால்வடியும் மரங்களாகிய ஆல், அரசு, அத்தி மற்றும் இத்திமரப்பட்டைகளுடன் கருங்காலிக் கட்டை மற்றும் வேலம்பட்டையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளிக்க எப்பேர்ப்பட்ட வாய்க்கொப்பளமும், வாய் வேக்காளமும் குணமாகிவிடுகின்றன.
அதிமதுரத்தூள் 20 கிராம், காசுக்கட்டி 10 கிராம், கத்தக்காம்பு 10 கிராம், நெய்யில் பொரித்த வால் - மிளகுத்தூள் 5 கிராம் சேர்த்துத் தண்ணீர் விட்டறைத்து சிறிய மாத்திரைகளாகச் செய்து வாயிலடக்கிக் கொள்ள வாய்ப்புண், தொண்டைப்புண், வாய்க்கொப்பளம் நீங்கி விடும்.
திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய்ச் சூர்ணத்துடன் அதி மதுரத்தூள் சீமமாக 5 கிராம் வீதமெடுத்து தேன் மற்றும் நெய் 1 ஸ்பூன் (5ml) அளவில் குழைத்து வாய்க்கொப்பளத்தில் பூச அவை நீங்கி விடும்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...