Skip to main content

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!


1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்

4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)

5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.

6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.

7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.

8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)

9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.

10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.

11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .

12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .

14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது

15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.

16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .

17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.

19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.

20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.

24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.

25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.

26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.


28. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.


29. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா சென்று வாருங்கள்...

30. ஏழை பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி தரலாம்....

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...