Skip to main content

சான்றோர்களின் மதிப்பு மிக்க அறிவுரைகள்

இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை.


இன்று பெண்கள் வலிவந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை இன்றி கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்கள். எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம்.


ஒரு நிமிடம் சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் .மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம். வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும்.

வைத்தியருக்கு கொடுப்பதை வணிகருக்கு கொடு—என்பார்கள் நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா.

அதற்கு முன் சில மருத்துவ பாடல்களைப் பார்ப்போம்.


“வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள்
சாப்பிடுவதற்காக வாழ வேண்டாம்”


“உடலுக்கு அழகு உழைப்பு
உள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு”


“தவறான ஆசைகள் நோயிற்கு காரணம்
ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம்”


நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ‘ —பழமொழி.


“உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”–முதுமொழிக் காஞ்சியில் கூடலூர் கிழார் கூறுகிறார்.




“இழிவு அறிந் துண்பான்கன் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய் ”


சிற்றுண்டி, பேருண்டிகளை அடிக்கடி விரும்பி உண்பவர்க்கு நீரிழிவு போன்ற தீராத நோய்கள் எளிதில் வரும் என்கிறார்.


“மீ தூண் விரும்பேல்”


‘”நுண்மை நுகரேல் ”


“நோய்க்கு இடம் கொடேல்” என்று ஆத்திச் சூடி யில் ஒளவையார் கூறியுள்ளார்.

வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களை விரும்பி அடிக்கடி உண்ணும் போது நோயுண்டாகும். அளவு அறிந்து உண்ணும் போது நோய்க்கு இடம் கொடுக்க அவசியம் இல்லை.எனவே,அதிகம் உணவை உண்டு அவதிப்படாமல் அளவுடன் உண்டு நோய்க்கு இடம் கொடுக்காமல் வாழச் சொல்கிறார் ஒளவையார்.

மேலும், குழந்தைகள் உண்டபின் வைப்பது, மீதியாகி வீணாகக் கூடாதே என்று சாப்பிடுவது இப்படி பல காரணங்களினால் பெண்கள் உணவு வகைகளை தேவை இல்லாமல் சாப்பிட நேரிடும்.

அதனால் உடல் பருத்து அழகு கெட்டு காட்சி தருவார்கள். உடல் அழகை பேணி காக்க வேண்டும் என்று எண்ணிய ஒளவையார்


“உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு”

“பாலோடு ஆயினும் காலம் அறிந்து உ ண் “– என்று கொன்றை வேந்தனில் கூறுகிறார்.ஒளவையார்.


“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து”.

காலம் அறிந்து அளவோடு பசித்த பின் உணவு உண்டு வந்தால் மருந்தின்றி நீண்ட நாள் வாழலாம் என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.

இதே கருத்தை தேரையார் வாகடம் என்னும் நூலில்


“மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்தயி ருண்போம்
முன்னைநாள் செய்தகறி அமுதெனும் அருந்தோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேது சுவை நாமிருக்கு மிடத்தே” -என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...