Skip to main content

தினம் ஒரு சித்த மருத்துவக் குறிப்பு

காட்டு சீரகம் ஒரு சிறிய பார்வை :-
➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖

பாடல் :-

“கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும்
மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி
கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும்
காட்டு நற்சீரகத்தைக் காண்.”

       -அகத்தியர் குணபாடம்-

காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு.

"சிற்றிலை" எனவும்  தமிழில் அழைக்கின்றனர்.

காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடியயது.

அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், மற்றும் வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது.

வயிற்று பூச்சிகளை வெளியேற்றும்.
தோல் நோய்களுக்கு அற்புத மருந்து.

அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

மேலும். ...

விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது.

அஜீரணத்துக்கு நல்லது.

நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, காட்டு சீரகப்பொடி சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவிய பின், சிறிது நேரம் கழித்து குளித்தால் பேன்கள் கொல்லப்படும். முடி பாதுகாக்க படும்.

இதே எண்ணெய் யை சொறி மற்றும் சிரங்கு களுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எள்ளுப்பொடி, அரை ஸ்பூன் காட்டு சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி காலை, மாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், வெண்புள்ளி, உள்ளங்கையில் ஏற்படும் கரும்புள்ளியை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி, பலத்தை கொடுக்கும்.

காலில் ஏற்படும் கரப்பான் களுக்கு
செம்பருத்தி இலை சாற்றில், காட்டு சீரகத்தை அரைத்துப் போட குணமாகும்.

 குறிப்பு....

காட்டு  சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.

                        

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...