Skip to main content

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை


1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்


3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்


5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்


4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

*பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:*

*பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்*

1. *அருந்துதல்* 

மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

2. *உண்ணல்*

 பசிதீர உட்கொள்ளல்.

3. *உறிஞ்சல்*
      
வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

4. *குடித்தல்*

நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

5. *தின்றல்*

 தின்பண்டங்களை உட்கொள்ளல்.

6. *துய்த்தல்*

 சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.

7. *நக்கல்*

 நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.

8. *நுங்கல்*

 முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.

9. *பருகல்*

நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.

10. *மாந்தல்*

 பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.

11. *மெல்லல்*

 கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

12. *விழுங்கல்*

 பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

 *முதலில் பருப்பு மற்றும் நெய்*( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),

*பிறகு குழம்பு* ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ),

*பிறகு ரசம்* ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),

*பிறகு மோர்* ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.

சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை.

*இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்*

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். *இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும்*.

வாழை இலையில் உணவு பரிமாறுவது *தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.*

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு *நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.*

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் *தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.*

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) *உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.*

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது.
சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

*தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.*

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...