Skip to main content

பௌத்திரம் எதனால் ஏற்படுகிறது

அதிக உடல் உழைப்பு
அதிக கோபம்
அதிக காம எண்ணங்கள்
அதிக போகம்
அதிக உடற்சூடு
இரவில் கண்விழிப்பது

இந்த நோய் எட்டு வகைப்படும்..


பௌத்திரம் குணமாக

தினமும் ஒரு நாட்டு வாழை பழத்தை கால் தேக்கரண்டியளவு விளக்கெண்ணெயில் தோய்துது சாப்பிடவும்...

2. குப்பைமேனி சமூலம் பொடி  150கி
ஓமம் பொடி 50கி
மிளகு தூள் 25கி
நாகபற்பம் - 10கி

இதில் வெருகடியளவு தினமும் காலை மாலை 48 நாட்கள் சுத்தமான பசு நெய்யில் கலந்து நக்கி சாப்பிட வேண்டும்...

3. காட்டு கருணைக்கிழங்கு லேகியம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.. துத்தி கீரை விளக்கெண்ணெயில் வதக்கி பருப்பு சேர்த்து மிளகு தூள் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம்

4. ஆமணக்கு இலையை சுத்தமான விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் இளஞ்சூடாக இருக்கும் போதே வைத்து கட்டவும்

5. குப்பைமேனி இலை - இரண்டு கைப்பிடி
கால் லிட்டர் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் சிறு தீயாக வைத்து காய்க்க வேண்டும் அதில் இந்த குப்பைமேனி இலைகளை போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தவும்...

இதை இரவு உறங்கும் முன் 20மிலி குடித்து விட்டு உறங்க வேண்டும்...

பாலில் கலந்தும் குடிக்கலாம்...

*முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்*

இரவு அதிக நேரம் கண்விழிக்க கூடாது

காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது

அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் கூடாது

பகல் உறக்கம் கண்டிப்பாக கூடாது

வெகு தூரம் பிரயாணம் செய்ய கூடாது

போதை வஸ்து கூடாது

உடல் உறவு கூடாது

புளி, காரம்( *மிளகு இஞ்சி மட்டுமே* ) உப்பு (வறுத்து) குறைத்து கொள்ளவும்...

புளிக்கு பதிலாக எழுமிச்சை பழச்சாறு அல்லது விதை தண்டு நீக்கிய தக்காளி சேர்க்கலாம்

சுடுநீர் தான் பயன்படுத்த வேண்டும் குளிக்கவும் குடிக்கவும்

மழை பனி அதிக வெயிலில் அலைய வேண்டாம்

உணவுக்கட்டுப்பாடு

மஞ்சள் பூசணி
அகத்திக்கீரை
முட்டை 
இறைச்சி
முதல் நாள் சமைத்த உணவுகள்
பாகற்காய்
மைதா
காரமான உணவுகள்
தூரித உணவுகளை தவிர்க்க வேண்டும்

இவை அனைத்தையும் 48 நாட்களுக்கு சொன்னது போல செய்தால் உங்கள் நோய் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்

நன்றி

- அகத்தியம்

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...