சீரகம்
திப்பிலி
மிளகு
இந்துப்பு
இவைகள் வகைக்கு ஒருபலம் (35 கிராம்)
பெருங்காயம்
கருவேப்பிலை
வகைக்கு அரை பலம் (17.500 கிராம்)
பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும், இந்துப்பை தவிர மற்ற சரக்குகளை பொன்வறுவலாக வறுத்து ,பின்னர் அனைத்து சரக்குகளையும் இடித்து துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு விராகன் எடை( 4 கிராம்) சூரணத்தை முதலில் சாப்பிடும் சாப்பாட்டுடன் போட்டு காய்ச்சிய பசுநெய்விட்டு பிசைந்து இருவேளை சாப்பிட்டு வரவும்.
வயிற்றுவலி
வயிற்று எரிச்சல்
உஷ்ணவாயு பேதி
அஜீரணம்
ஆகிய நோய்கள் நீங்கும்.
இச்சா பத்தியம்
- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...
Comments
Post a Comment