Skip to main content

செரிமானக் கோளாறு - Indigestion

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 

இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். 

மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். 

ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். 

வாயு வெளியேற்றம்: 

வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்

செரிமானக் கோளாறு: 

சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்.. 

ஈறுகளில் வீக்கம்: 

ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5 நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம். 

மூட்டு வலிகள்: 

ஓம எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம். 

வலி மற்றும் காயங்கள் : 

ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும் வீக்கங்கள் குணம் பெறும். 

வயிறு வலி: 

வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும். 

அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...