Skip to main content

ரசாயனம் தவிர்....

ரசாயனம் தவிர்

ஷாம்பு 
ஒரு காலத்தில் பணக்காரரின் அழகுச் சாதனம். ஒரு ரூபாய் பாக்கெட்டில் விற்கப்படத் தொடங்கியதும் ஷாம்புவின் பயன்பாடு இப்போது தினசரி பல லட்சம் லிட்டர்கள். `அடிக்கடி ஷாம்பு போடாதேன்னா, அப்போ தலைக்கு என்ன போடுறது?' எனக் கேட்கும் அளவுக்கு ஷாம்பு பல வீடுகளில் தினசரி சங்கதியாகிவிட்டது. `நல்லா புசுபுசுனு நுரைக்கிற மாதிரி நம் ஊர் சங்கதி வேற எதுவும் இல்லையா?' என்போருக்கு ஒரு செய்தி.

பூவந்திக்கொட்டை - சோப்புக்காய் என வெகுஜன மொழியில் பேசப்படும் மூலிகைக்கொட்டை. நகைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. சீகைக்காய், பாசிப்பயறுடன் இந்தக் கொட்டையைச் சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு ஷாம்புக்குப் பதில் பயன்படுத்தலாம். கொஞ்சமாக நுரைக்கும் இந்த மூலிகை, அழுக்கை நீககி முடியை பலமாக்கும்.
கண்டிஷனர் என சந்தையில் கிடைக்கும் அத்தனையும் எண்ணெயோடு சேர்த்து பல ரசாயனங்களின் கலவையே. தலைக்கு அடிக்கடி தினசரி தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும், கண்டிஷனர் அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை மட்டும் எண்ணெய்க் குளியலுக்கு என நல்லெண்ணெய் தேய்க்கலாம்.

ரசாயனம் இல்லா முகப்பேணலுக்கு இன்னும் வழி உண்டு. பிளீச்சிங் செய்து பொலிவைப் பெற முல்தானிமட்டியோடு ஆவாரை, ரோஜா இதழ் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் மாதிரி பயன்படுத்த தோசைமாவு பயன்படுத்தலாம். அது ஒரு புரோபயோடிக் நேச்சுரல் ஸ்க்ரப்பும்கூட.

முகப்பருவுக்கு - திருநீற்றுப் பச்சிலை

மருவுக்கு - அம்மான் பச்சரிசி

தேமலுக்கு - சீமையகத்தி இலை

கரும்படைக்கு - பூவரசம் பூ எண்ணெய்

எனப் பல மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. `எல்லாவற்றிலும் கொஞ்சம் போட்டு, அஞ்சே நாளில் அழகாயிடலாம்!' என முயற்சிக்க வேண்டாம். 

முறையாக பயன்படுத்தி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...