Skip to main content

Posts

மலச்சிக்கல் / மலக்கட்டு உடைய

  திரிபலா சூரணம் + நிலவாகை சூரணம் சம அளவு கலந்து அதில் 5கி அளவு 100மிலி வெந்நீரில் / சம அளவு கருப்பட்டி சேர்த்து கலந்து இரவு உணவிற்கு பிறகு சாப்பிட மலம் நன்றாக கழியும் - *அகத்தியம்*   *9841168598*
Recent posts

தை மாத தமிழர் மருத்துவம்

  *செங்கரும்பு மருத்துவம்* 1. கரும்பு பித்தத்தை தணிக்கும் 2. சிறுநீர் பாதை தொற்று + உடல் சூட்டினால் வரும் சொட்டு மூத்திரம் குணமாகும் 3. பற்களுக்கு உறுதி தரும் 4. கரும்பு சாறு + எலுமிச்சை சாறு + சிறிது உப்பு கலந்து குடிக்க மஞ்சள் காமாலை வராது 5. புற்று நோயின் தாக்கத்தை குணப்படுத்த கரும்பு சாறு உதவுகிறது 6. செரிமானத்தை சீராக்கும் 7. கரும்புசக்கையை கொஞ்சம் எடுத்து தீயிலிட்டு நன்றாக எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வெண்ணெய் சிறிது கலந்து உதடு மற்றும் பாத வெடிப்பின் மீது தடவி வர வெடிப்புகள் மாயமாய் மறையும் *பசும்மஞ்சள் / மஞ்சள் கிழங்கு வைத்தியம்* 1. பசும்மஞ்சளை தோல் சீவி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டியளவு + 50 மிலி காய்ச்சிய பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் + புழுக்கள் வெளியாகும்.... 2. பசும்மஞ்சள் + துளசி கொதிக்கும் நீரில் போட்டு ஆவி / வேது பிடிக்க முக சருமத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும் முகம் பளபளப்பாக இருக்கும் 3. குர்க்குமின் எடுக்காத இயற்க்கையில் விளைந்த மஞ்சளை பயன்படுத்தினால் மாரடைப்பு + புற்றுநோய் வராது *காப்பு கட்டுதல்* என்பது  *வே...

உயர் இரத்த அழுத்தம் / குறைந்த இரத்த அழுத்தம் குணமாக / இருதயம் பலப்பட

  20 செம்பருத்திப் பூ நடுவில் உள்ள தண்டையும் காம்பையும் நீக்கி இதழ்களை மட்டும் எடுத்து ஒரு வெண்தாமரை இதழ்கள் 20 கிராம சீரகத்தை அதில் போட்டு எட்டு கோப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு கோப்பை அளவுக்கு சிறு தீயில் வைத்து சுண்ட காய்ச்சி வடிகட்டி காலை மாலை இருவேளையும் ஒரு கோப்பை அளவு இந்த நீரை குடித்து வந்தால் ஆறு மாதங்களில் உயர் மற்றும் தாழ் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்.... இதில் சக்கரை சேர்க்காமல் இளஞ்சூடான பின் சுத்தமான தேன் கலந்து பருகவும்... நன்றி - *அகத்தியம்*       *9841168598* https://www.facebook.com/groups/541186233197447/ *Blog Link* http://www.chakraayudham.blogspot.com *Telegram Link* - https://t.me/AgathiyamHerbals *YouTube Channel Link* https://youtu.be/q7ov-RnVMUc *Please Share & Subscribe For More Simple Effective Siddha Remedies*

மூச்சின் முக்கியம்

 உங்கள் மூச்சு அதிகமாக செலவு / விரயம் செய்யும் எந்த செயலையும் / வேலையையும் செய்யாதீர்கள்... *இது உங்கள் ஆயுளை குறைக்கும்....* நன்றி - *அகத்தியம்*

மலச்சிக்கல்நீக்கும் எளிமையான மூலிகைகள்

  அகத்திக்கீரை, அறுகீரை,  துத்திக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளி, முசுட்டைக்கீரை, இலந்தைபழம், வாழைப்பழம், கனிந்த மாம்பழம், புளியம்பழம், ஆமணக்கு எண்ணெய், வேப்பம் எண்ணெய், போன்றவைகளை முறையாக உண்ண மலச்சிக்கல் இல்லாமல்  உடலை பாது காக்க முடியும்   *உறவுகளே நம் குழுவில் பதிவாகும் அனைத்து மருந்துகளும் அனுபவத்தில் உணர்ந்து வெற்றி கண்டவையே......*