Skip to main content

காயகற்பம்



காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும்.

காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது. அழுகணிச் சித்தர் பாடல்களில் இந்த காயகற்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பாடல்தொகுப்பு

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு

இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.

தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும்.

இங்கே

பூ என்பது தாமரைப்பூ

மேனி என்பது குப்பைமேனி

தும்பி என்பது தும்பைச்செடி

கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை)

பாதம் என்பது செருப்படை

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம்.

நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி அணுகாது. நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்தில் வாழலாம். இந்த ஐந்து மூலிகைகளிலுமுள்ள செம்பு, இரும்பு, ஈயம் போன்ற தாதுப்புக்கள் நரம்புத்தளர்ச்சி, எலும்புருக்கி மற்றும் பலகீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்யுமாகையால், முன்னோர்கள் காயகல்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றனர்.

நம்மில் சிலர் இந்த மூலிகைகள் பலன் கொடுக்குமா என்று சந்தேகம் கொள்ளலாம். ஆனால் பதிணெண் சித்தர்களுள் ஒருவரான தேரையர் இதில் சில மூலிகைகளைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கின்றார்.

சீறுகின்ற பாம்போடு சில்விஷங்கள் சென்னிவலி

ஏறுகபம் மாந்தம் இருக்குமோ - நாறுமலர்க்

கொம்பனைய மாதே குளிர்சீத சன்னிவிடும்

தும்பையிலை யென்றொருக்கால் சொல்

தந்த மூலப்பிணி தீர்ந்திடும் புண் சர்வ விஷம்

உந்து குன்மம்வாதம் உதிர்மூலத் தினவு

சூலம் சுவாசம் தொடர்பீனிசம் கபம்போம்

ஞாலங் கொள் மேனி அதனால்

செருப்படைக்கு வாதம்போம் சேர்வான மேகம்

இருப்படிக்கொள் பொல்லாஇசிவும் விருப்படிக்கும்

சூலையொடு வாதகுன்மம் தோற்றா தொருநாளும்

வேலையொத்த கண்ணாய் விளம்பு

*காயகல்ப மூலிகைகளை உபயோகிக்கும் முறைதொகுப்பு*

வெண்தாமரைப்பூ இதழ்கள் - 840 கிராம்

குப்பைமேனி - 700 கிராம்

தும்பை சமூலம் - 560 கிராம் ( சமூலம் என்பது ஒரு செடியின் இலை, தண்டு, மலர், வேர் எல்லாவற்றையும் உலர்த்தி இடித்த பொடி)

கையாந்தகரை - 300 கிராம்

செருப்படை - 280 கிராம்

இவை அனைத்தையும் நிழலில் உலர்த்தித் தனித்தனியாக இடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். 5 கிராம் பொடியை காலையிலும், மாலையிலும் சுத்தமான தேனில் குழைத்துச் சாப்பிட்டு, சீனாக் கற்கண்டு கலந்த பசுப்பால் 175 மில்லி லீற்றர் ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும்.

இந்த மருந்தைச் சாப்பிடுவதற்கு முன்னர் பேதிக்குச் சாப்பிட்டு குடலைச் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும்.   
                   

- *ஆதி மருத்துவம்*

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...