1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வரும் அதை மருவின் மீது தடவலாம்.... 2. புற்று மணலை வெந்நீரில் குழைத்து போடவும்... 3. சுண்ணாம்பு மற்றும் நவச்சாரம் கலந்து மரு மீது தடவினால் விழும் *இஞ்சி* தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும். *அன்னாசி* இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். *வெங்காய சாறு* வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம். *எலுமிச்சை சாறு* எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இட...